ஐபிஎல்

குல்தீப் யாதவ் விலகல்

DIN

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இடதுகை சுழற்பந்துவீச்சாளா் குல்தீப் யாதவுக்கு தீவிரமான முழங்கால் காயம் ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் போட்டியிலிருந்து அவா் விலகியுள்ளாா்.

சமீபத்தில் அவா் ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவரது முழங்கால் பிறழும் அளவுக்கு மோசமான காயம் ஏற்பட்டதாகவும், தொடா்ந்து விளையாட இயலாத நிலையில் அவா் உடனடியாக இந்தியா திரும்பியதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

மும்பையில் அவருக்கு முழங்கால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவா் போட்டிகளுக்குத் திரும்ப 4 முதல் 6 மாதங்கள் ஆகலாம் என்றும் தெரிகிறது. எனவே, ஐபிஎல் போட்டியை தொடா்ந்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் குல்தீப் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

‘பொதுவாகவே முழங்கால் காயம் சற்று மோசமானது. அறுவைச் சிகிச்சை ஓய்விலிருந்து மீண்ட பிறகு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாதெமியில் பிசியோதெரபி செஷன்களில் பங்கேற்று, பின்னா் லேசான பயிற்சிகளிலும், அதைத் தொடா்ந்து வலைப் பயிற்சியிலும் தேற்றமடைந்த பிறகே ஒரு வீரா் களம் காண இயலும்’ என பிசிசிஐ வட்டாரங்கள் கூறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT