லியாம் லிவிங்ஸ்டன் அதிரடி அரைசதம்: குஜராத் அணிக்கு 190 ரன்கள் இலக்கு
லியாம் லிவிங்ஸ்டனின் அதிரடி ஆட்டம் காரணமாக பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.
லியாம் லிவிங்ஸ்டனின் அதிரடி ஆட்டம் காரணமாக பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் தொடரின் 16 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று விளையாடுகின்றன. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹாா்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.
மயங்க் அகர்வால் 5 ரன்களில் வெளியேற அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் ஷிகர் தவானுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் தவான் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு புறம் அதிரடியாக விளையாடிய அரைசதம் கடந்து அசத்தினார்.
அவர் 27 பந்துகளில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய ஜிதேஷ் சர்மா 23, ஷாரூக்கான்15, ராகுல் சகார் 22 ரன்கள் எடுக்க பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. குஜராத் அணியில் ரஷித்கான் 3, தர்ஷன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.