ஐபிஎல்

தோனியும் ஜடேஜாவும் தினமும் திட்டமிடுகிறார்கள்: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

அணியை எப்படி வழிநடத்த வேண்டும் என ஜடேஜா விரும்புகிறாரோ அதன்படி நடந்துகொள்கிறோம்.

DIN

ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் புதிய கேப்டன் ஜடேஜா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

அடுத்ததாக ஆர்சிபியுடன் நாளை விளையாடுகிறது சிஎஸ்கே அணி. ஜடேஜா பற்றி சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியதாவது:

ஜடேஜாவை கேப்டனாக்கியது பெரிய மாற்றம். நீண்ட காலமாக கேப்டனாக இருந்த தோனி அற்புதமான வெற்றிகளைப் பெற்றுள்ளார். ஜடேஜா கேப்டனாகியுள்ள முதல் வருடத்தில் தோனி உடன் இருந்து அவருக்கு உதவி செய்து வருகிறார். ஜடேஜாவும் தோனியும் தினமும் அணியின் திட்டங்கள் பற்றி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்குடன் இணைந்து விவாதிப்பதை நான் அறிவேன். 

அணியில் அனைவரும் ஜடேஜாவுக்கு உரிய மரியாதையை அளிக்கிறார்கள். அணியை எப்படி வழிநடத்த வேண்டும் என ஜடேஜா விரும்புகிறாரோ அதன்படி நடந்துகொள்கிறோம். அணிக்குச் சில வெற்றிகள் கிடைத்தால் ஜடேஜாவால் ஒரு கேப்டனாக இயல்புடன் இருக்க முடியும். அனைவரும் ஜடேஜாவுக்கு ஆதரவளிக்கிறோம். விரைவில் சில வெற்றிகள் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT