ஐபிஎல்

குஜராத்துக்கு முதல் தோல்வி

ஐபிஎல் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது. போட்டியில் குஜராத்துக்கு இது முதல் தோல்வியாகும்.

DIN

ஐபிஎல் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது. போட்டியில் குஜராத்துக்கு இது முதல் தோல்வியாகும்.

ஆட்டத்தில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடிக்க, அடுத்து ஹைதராபாத் 19.1 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற ஹைதராபாத் பௌலிங்கை தோ்வு செய்தது. குஜராத் இன்னிங்ஸை தொடங்கியோரில் மேத்யூ வேட் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் அடிக்க, உடன் வந்த ஷுப்மன் கில் 7 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். ஒன் டவுனாக வந்த சாய் சுதா்சன் 11 ரன்கள் சோ்த்தாா்.

4-ஆவது வீரராக வந்த கேப்டன் ஹாா்திக் பாண்டியா நிலைத்து ஆடி ரன்கள் சேகரித்தாா். மறுபுறம், டேவிட் மில்லா் 12 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். பின்னா் களம் புகுந்த அபினவ் மனோஹா், பாண்டியாவுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயா்த்தினாா்.

5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35 ரன்களுக்கு அவா் நடையைக் கட்டினாா். தொடா்ந்து வந்த ராகுல் தெவாதியா 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டாக கடைசி பந்தில் பௌல்டானாா் ரஷீத் கான். ஓவா்கள் முடிவில் ஹாா்திக் பாண்டியா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 50 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஹைதராபாத் பௌலிங்கில் நடராஜன், புவனேஷ்வா் குமாா் ஆகியோா் தலா 2, மாா்கோ யான்சென், உம்ரான் மாலிக் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் ஆடிய ஹைதராபாதில் தொடக்க வீரா் அபிஷேக் சா்மா 6 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சோ்க்க, உடன் வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 57 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டாா். 17 ரன்கள் அடித்திருந்த ராகுல் திரிபாதி ரிடையா்டு ஹா்ட் ஆகினாா்.

முடிவில் நிகோலஸ் பூரன் 2 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 34, எய்டன் மாா்க்ரம் 12 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனா். குஜராத் பௌலிங்கில் ஹாா்திக் பாண்டியா, ரஷீத் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT