ஐபிஎல்

மூத்த வீரர் ஷமி மீது கோபம் கொள்வதா?: பாண்டியாவுக்கு ரசிகர்கள் கண்டனம்

சன்ரைசர்ஸ் இன்னிங்ஸில் 13-வது ஓவரை பாண்டியா வீசினார். அப்போது ராகுல் திரிபாதி கொடுத்த கேட்சை...

DIN

ஐபிஎல் போட்டியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஷமி மீது கோபம் கொண்ட குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

நவி மும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத்தை சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. ஹார்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்தார். நடராஜன், புவனேஸ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். சன்ரைசர்ஸ் அணி, 19.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வில்லியம்சன் 57 ரன்கள் எடுத்தார். 

சன்ரைசர்ஸ் இன்னிங்ஸில் 13-வது ஓவரை பாண்டியா வீசினார். அப்போது ராகுல் திரிபாதி கொடுத்த கேட்சைப் பிடிக்க டீப் தேர்ட் மேன் பகுதியில் இருந்த ஷமி பெரிதாக முயற்சி செய்யவில்லை. பதிலாக, பந்து கீழே விழுந்த பிறகே அவர் அதைப் பிடித்தார். அந்த ஓவரில் ஏற்கெனவே வில்லியம்சன் இரு சிக்ஸர்களை அடித்திருந்தார். இந்நிலையில் ஷமி அந்த கேட்சைப் பிடிக்க முயலாததால் பாண்டியா அவர் மீது கோபத்தை வெளிப்படுத்தினார்.

இதைத் தொலைக்காட்சியில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். மூத்த வீரர் ஷமி மீது பாண்டியா கோபத்தை வெளிப்படுத்தியது சரியல்ல என்று சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதினார்கள். அணி வீரர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என பாண்டியாவுக்குத் தெரியவில்லை. ஷமி இந்திய அணிக்காகப் பல வருடங்களாகப் பங்களித்து வருகிறார். அவரிடம் இப்படி நடந்துகொள்ளலாமா என்று பலரும் தங்களுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT