ஐபிஎல்

ரிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸல் அதிரடி: சன்ரைசர்ஸ் அணிக்கு 176 ரன்கள் இலக்கு

DIN

ரிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸல் அதிரடி காரணமாக கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 25ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இன்று விளையாடுகின்றன. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெங்கடேஷ் ஐயர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் வந்த வேகத்தில் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் வந்த சுனில் நரேன் 6 ரன்களில் வெளியேற ரிதிஷ் ராணா அதிரடியாக விளையாடினார். அவர் 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின் வரிசை வீரர்களில் ஆண்ட்ரே ரஸலும் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 25 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக நடராஜன் 3, உம்ரான் மாலி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT