ஐபிஎல்

தினேஷ் கார்த்தி, மேக்ஸ்வெல் அதிரடி அரைசதம்: தில்லிக்கு 190 ரன்கள் இலக்கு

DIN

தினேஷ் கார்த்தி, மேக்ஸ்வெல் அதிரடி அரைசதம் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 189 ரன்கள் குவித்தது.

ஐபிஎல் தொடரின் 27ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி, அனுஜ் ராவத் ஆகியோர் களமிறங்கினர். 

அனுஜ் ராவத் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து டு பிளெஸ்ஸியும் 8 ரன்களில் வெளியேறினார். அடுத்த வந்த விராத் கோலியும் 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதன்பின்னர் களம்கண்ட க்ளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடினார். அவர் 34 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஷபாஸ் அகமதுவும், தினேஷ் கார்த்தியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. தினேஷ் கார்த்தி 66(34 பந்துகள்), ஷபாஸ் அகமது 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT