ஐபிஎல்

ஒரு சதமும் அடிக்காமல் 100 ஆட்டங்களை விளையாடியுள்ள கோலி!

DIN

2019 நவம்பர் 23 அன்று வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் 136 ரன்கள் எடுத்தார் கோலி. அது அவருடைய 70-வது சதம். 

அதன்பிறகு சதமடிக்காமல் 100 ஆட்டங்களில் விளையாடி முடித்துவிட்டார் கோலி.

2019 நவம்பருக்குப் பிறகு 17 டெஸ்டுகள், 21 ஒருநாள், 25 டி20, 37 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடிய கோலியால் ஒருமுறை கூட சதமெடுக்க முடியவில்லை. 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் 7 ஆட்டங்களில் 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் கோலி. 

ஐபிஎல் போட்டியில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் கோலிக்கு 2-ம் இடம். 6 சதங்களுடன் கெயில் முதலிடத்திலும் 5 சதங்களுடன் கோலி 2-ம் இடத்திலும் உள்ளார்கள். 

விராட் கோலி களமிறங்கினாலே சதமடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு இப்போது மாறிவிட்டது. ஒரு சதமாவது அடித்தால் நல்லது என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள் ரசிகர்கள். சமீபகாலமாக தனது கேப்டன் பதவிகளைத் துறந்தார். இப்போது பேட்டிங்கிலும் ஏமாற்றம் அளித்து வருகிறார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக ஆகஸ்ட் 2019-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகத் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்தார். யார் கண் பட்டதோ, இன்றுவரை மற்றொரு சதத்தைக் காண முடியவில்லை. (சர்வதேச டி20யில் ஒரு சதமும் அடித்ததில்லை.)

இந்த நிலைமை எப்போது மாறும்? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT