சிஎஸ்கே அணி 
ஐபிஎல்

ஐபிஎல் : பிரபல சிஎஸ்கே வீரர் விலகல், 19 வயது இலங்கை வீரர் தேர்வு!

மலிங்கா போல பந்துவீசக்கூடிய இலங்கை வீரர் பதிரனாவைத் தேர்வு செய்துள்ளது சிஎஸ்கே. 

DIN

ஐபிஎல் போட்டியிலிருந்து சிஎஸ்கே வீரர் ஆடம் மில்ன் விலகியுள்ளார். இதையடுத்து மலிங்கா போல பந்துவீசக்கூடிய இலங்கை வீரர் பதிரனாவைத் தேர்வு செய்துள்ளது சிஎஸ்கே. 

நியூசிலாந்தைச் சேர்ந்த ஆடம் மில்னை ஏலத்தில் ரூ. 1.90 கோடிக்குத் தேர்வு செய்தது சிஎஸ்கே. ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக விளையாடினார் மில்ன். அதன்பிறகு அவருக்குக் காயம் ஏற்பட்டதால் இதர ஆட்டங்களில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து மில்ன் விலகியுள்ளார். இதையடுத்து 19 வயது இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவைத் ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது சிஎஸ்கே. 

மலிங்கா போல பந்துவீசக் கூடிய பதிரனா, இந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் 4 ஆட்டங்களில் பங்கேற்று 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி - 6.16. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளியானது விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் டிரைலர்!

ஐபோன் 17 ஏர் நாளை அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: நம்பிக்கையின் அடிப்படையில் ஆட்டோ பங்குகள் ஏற்றம்!

அழகூரில் பூத்தவளே... ஜான்வி கபூர்!

வெள்ள இடர்பாடுகளில் ராணுவத்தின் மகத்தான சேவைக்குப் பாராட்டு!

SCROLL FOR NEXT