முகப்பு
ஐபிஎல்

மும்பைக்கு எதிரான ஆட்டம்: சென்னை அணிக்கு 156 ரன்கள் இலக்கு

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் டி20 போட்டியின் 33 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று விளையாடிக் கொண்டிருக்கின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது.

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.

சென்னை அணியின் பந்துவீச்சாளர் முகேஷ் சௌத்ரியின் அபாரமான பந்துவீச்சால் முதல் ஓவரிலேயே ரோகித் சர்மாவும்  இஷானும் ‘டக்’ ஆகி மும்பை அணிக்கு அதிர்ச்சியளித்தனர்.

இருப்பினும், பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மும்பையின் ஸ்கோர் அதிகரித்தது.

இறுதியில், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்த மும்பை அணி 155 ரன்களைச் சேர்த்தது. அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய திலக் வர்மா 51 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 32 ரன்களையும் குவித்தனர்.

சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக முகேஷ் சௌத்ரி 3 விக்கெட்களையும், பிராவோ 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

156 ரன்கள் இலக்குடன் சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →