மார்க் வுட் (கோப்புப்படம்) 
ஐபிஎல்

லக்னௌ அணியில் மாற்றம்: இங்கி. வீரருக்குப் பதில் ஆஸி. வீரர் தேர்வு

ஐபிஎல் 2022-இல் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியில் காயமடைந்த மார்க் வுட்டுக்குப் பதில் ஆண்ட்ரூ டை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

DIN


ஐபிஎல் 2022-இல் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியில் காயமடைந்த மார்க் வுட்டுக்குப் பதில் ஆண்ட்ரூ டை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டிருந்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதனால், ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், அவருக்குப் பதில் மாற்று வீரராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ டை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்காக 32 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 27 ஐபிஎல் ஆட்டங்களில் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

2022 ஐபிஎல் மார்ச் 26-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை மார்ச் 28-ம் தேதி எதிர்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT