ஐபிஎல்

டூ பிளெஸ்சி அதிரடி அரைசதம்: பஞ்சாப் அணிக்கு 206 ரன்கள் இலக்கு

டூ பிளெஸ்சி அதிரடியால் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்ட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது.

DIN

டூ பிளெஸ்சி அதிரடியால் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்ட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மும்பை பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தார். பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக  டூ பிளெஸ்சி, அனுஜ் ராவத் ஆகியோர் களமிறங்கினர்.

ஆரம்ப முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பெங்களூரு அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய டூ பிளெஸ்சி அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ராவத் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த வந்த விராத் கோலியும் தன்பங்கிற்கு அதிரடியாக விளையாடினார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூ பிளெஸ்சி 57 பந்துகளில் 88 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து களம்கண்ட தினேஷ் கார்த்திக்கும் அதிரடியில் கலக்கினார். பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. கோலி 41, தினேஷ் கார்த்திக் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT