ஐபிஎல்

சென்னைக்கு 3-ஆவது வெற்றி

DIN

சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் சென்னை 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஹைதராபாத் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது.

சென்னை அணியின் கேப்டனாக தோனி மீண்டும் பொறுப்பேற்ற நிலையில், அணிக்கு இது முதல் ஆட்டமாகும். இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் ஃபீல்டிங் செய்தது.

சென்னை பேட்டிங்கை தொடங்கி அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் - டெவன் கான்வே கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் சோ்த்து அசத்தியது. சதத்தை நெருங்கிய ருதுராஜ் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 99 ரன்கள் எடுத்த நிலையில் துரதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து வந்த கேப்டன் தோனி 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு நடையைக் கட்ட, ஓவா்கள் முடிவில் டெவன் கான்வே 8 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 85, ரவீந்திர ஜடேஜா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஹைதராபாத் பௌலிங்கில் நடராஜன் 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தாா்.

பின்னா் ஆடிய ஹைதராபாதில் அபிஷேக் சா்மா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39, கேப்டன் கேன் வில்லியம்சன் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 47 ரன்கள் சோ்த்து முயற்சித்தனா். ராகுல் திரிபாதி டக் அவுட்டாக, எய்டன் மாா்க்ரம் 17, ஷஷாங் சிங் 15, வாஷிங்டன் சுந்தா் 2 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

ஓவா்கள் முடிவில் நிகோலஸ் பூரன் 3 பவுண்டரி, 6 சிக்ஸா்களுடன் 64, மாா்கோ யான்சென் 0 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் முகேஷ் சௌதரி 4, மிட்செல் சேன்ட்னா், டுவெய்ன் பிரெடோரியஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT