ஐபிஎல்

சாய் சுதர்சன் நம்பிக்கை அரைசதம்: குஜராத் 143 ரன்கள் குவிப்பு

DIN


பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்க்கிழமை) லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் 9 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். இதன்பிறகு, தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது சாய் சுதர்சன் களமிறங்கினார். தொடக்கத்தில் ரன் குவிக்க சற்று தடுமாறினார். ரித்திமான் சஹா சற்று பவுண்டரி அடித்தது சுதர்சனுக்கு உதவியது.

இதன்பிறகு, சஹா 17 பந்துகளில் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி பெவிலியனுக்கு திரும்பினர். ஹார்திக் பாண்டியா (1), டேவிட் மில்லர் (11), ராகுல் தெவாட்டியா (11) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறியதால் கடைசி நேரத்தில் அதிரடி காட்டுவதற்கு ஆள் இல்லாமல் குஜராத் திணறியது.

மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடி வந்த சாய் சுதர்சன், அர்ஷ்தீப் சிங் வீசிய 18-வது ஓவரில் சிக்ஸரை பறக்கவிட்டு 42-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். கடைசி நேரத்தில் அவர் காட்டிய சற்று அதிரடியே குஜராத்தை 140 ரன்களைத் தாண்டச் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சுதர்சன் 50 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT