முகப்பு
ஐபிஎல்

கடைசி ஓவரில் கார்த்திக் அதிரடி: சென்னைக்கு 174 ரன்கள் இலக்கு

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:09 AM
படம்: ட்விட்டர் | ஐபிஎல்
பகிர்:



சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பெங்களூரு தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி, விராட் கோலி களமிறங்கினர். சென்னைப் பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்ட இந்த இணை துரிதமாக ரன் சேர்த்து நெருக்கடியளித்தது. குறிப்பாக டு பிளெஸ்ஸி அதிரடி காட்டி அசத்தினார். இதனால், முதல் 5 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் சேர்த்தது.

பவர் பிளேவின் கடைசி ஓவரில் மகேஷ் தீக்ஷனா அறிமுகப்படுத்தப்பட்டதால் ரன் வேகம் சற்று குறைந்தது. இதன்பிறகு, ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயீன் அலி தாக்கத்தை உண்டாக்கத் தொடங்கினர். டு பிளெஸ்ஸி 22 பந்துகளில் 38 ரன்களுக்கு மொயீன் அலி சுழலில் ஆட்டமிழந்தார். ஜடேஜா ஓவரில் கிளென் மேக்ஸ்வெல் வெறும் 3 ரன்னுக்கு ரன் அவுட் ஆனார். அடுத்த ஓவரில் விராட் கோலியை (30) மொயீன் அலி வழக்கமான பாணியில் போல்டாக்கினார்.

இதனால், 10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்து சற்று தடுமாற்றம் கண்டது.

இதன்பிறகு, ரஜத் படிதார் மற்றும் மஹிபால் லோம்ரோர் பாட்னர்ஷிப் அமைத்தனர். ரன் ரேட்டையும் இந்த இணை சற்று உயர்த்தியது. கடைசி நேர அதிரடிக்குத் தயாரானபோது படிதார் 21 ரன்களுக்கு டுவைன் பிரிடோரியஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆனால், லோம்ரோர் அதிரடியை வெளிப்படுத்தத் தொடங்கினார். குறிப்பாக பிரிடோரியஸ் வீசிய 18-வது ஓவரில் லோம்ரோர் சிக்ஸர், பவுண்டரி விளாச அந்த ஓவரில் மட்டும் பெங்களூருவுக்கு 18 ரன்கள் கிடைத்தன.

ஆனால், 19-வது ஓவரின் முதல் பந்தில் லோம்ரோர் விக்கெட்டை வீழ்த்தினார் தீக்ஷனா. லோம்ரோர் 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய வனிந்து ஹசரங்கா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஷபாஸ் அகமதையும் போல்டாக்கினார் தீக்ஷனா. 19-வது ஓவரில் பெங்களூரு அணி 3 விக்கெட்டை இழந்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தது.

எனினும், தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் தனது சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இரண்டு சிக்ஸர் விளாச அந்த ஓவரில் மட்டும் பெங்களூரு 16 ரன்கள் குவித்தது. 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கார்த்திக் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →