ஐபிஎல்

டி காக் அரைசதம்: கொல்கத்தா அணிக்கு 177 ரன்கள் இலக்கு

DIN

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. 

ஐபிஎல் தொடரின் 53ஆவது லீக் ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. லக்னெளவின் தொடக்க வீரர்களாக டி காக், கேஎல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

ஆனால் கேஎல் ராகுல் ரன் கணக்கை தொடங்கும் முன்பே ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். ராகுல் ஆட்டமிழந்ததும் அடுத்த வந்த ஹூடா,  டி காக்குடன் கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணி கொல்கத்தா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஹூடாவும் 41 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதன் பின்னர் களமிறங்கிய கிருணால் பாண்டியா 25, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 28, ஹோல்டர் 13 ஆகியோர் தங்கள் பங்கேற்கு ரன்கள் சேர்த்தனர். இதனால் லக்னௌ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. கொல்கத்தா பௌலிங்கில் ஆண்ட்ரே ரஸல் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT