ஐபிஎல்

கான்வே அதிரடி அரைசதம்: சென்னை அணி 208 ரன்கள் குவிப்பு

DIN

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது.

ஐபிஎல் தொடரின் 55ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. நவிமும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவ் வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் ஜடேஜாவுக்கு பதில் ஷிவம் துபே இடம்பெற்றார். 

இதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ருதுராஜ், கான்வே ஜோடி டெல்லி அணியின் பந்துவீச்சை நான்கு புறமாக பறக்கவிட்டனர். அணியின் ஸ்கோர் 110ஆக இருந்தபோது ருதுராஜ் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் துபேவும் தன்பங்கிற்கு அதிரடியில் கலக்கினார்.

சிறப்பாக விளையாடிய கான்வே 49 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து துபே 19 பந்துகளில் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பின்னர் ராயுடு வந்த வேகத்தில் 5 ரன்களில் வெளியேற கேப்டன் தோன் களம்கண்டார். எஞ்சிய பேட்டர்கள் மொயின் அலி 9, உத்தப்பா 0 என அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. தோனி 21(8பந்துகள்), பிராவோ 1 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி பௌலிங்கில்அன்ரிச் நார்ட்ஜே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT