ஐபிஎல்

ரஸல் மிரட்டல்: சன்ரைசர்ஸ் அணிக்கு 178 ரன்கள் இலக்கு

DIN

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது.

ஐபிஎல் தொடரின் 61ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடா்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. மகாராஷ்டிர கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். வெங்கடேஷ் ஐயர், ரஹானே ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் வெளியேற ரஹானே சிறிதுநேரம் நிலைத்து ஆடினார். 

அடுத்து வந்த ராணாவும் ரஹானேக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். ஆனால் ராணா 16 பந்துகளில் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த நிலையில் கேப்டன் ஷ்ரேயஸ் களம்கண்டார். 24 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே 28 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஷ்ரேயஸ் ஐயா் 15, ரிங்கு சிங் 5 என அடுத்தடுத்து வெளியேற கடைசிகட்டத்தில் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸலும் அணிக்கு ஆறுதல் அளித்தனர். 

சாம் பில்லங்ஸ் 29 பந்துகளில் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஸல் 49(28பந்துகள்) ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சன்ரைசர்ஸ் பௌலிங்கில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT