ஐபிஎல்

புவனேஷின் 19வது ஓவர் தான் ஆட்டத்தின் திருப்புமுனை: ஹைதராபாத் கேப்டன் புகழாரம்

மும்பை: ஐபிஎல் 2022 தொடரின் 65வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெறக்காரணம் புவனேஷின் 19வது ஓவர் தானென ஹைதராபாத் கேப்டன் புகழ்ந்து கூறினார்.

DIN

மும்பை: ஐபிஎல் 2022 தொடரின் 65வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெறக்காரணம் புவனேஷின் 19வது ஓவர் தானென ஹைதராபாத் கேப்டன் புகழ்ந்து கூறினார். 

நேற்று (மே-17) நடந்த பரப்பரபான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 193 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 17வது ஓவர் வரை 149 ரன் எடுத்து இருந்தது. ரமன்தீப் 0, டிம் டேவிட் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 18 பந்துகளில் 45 ரன்கள் தேவைப்பட்டது.  18வது ஓவர் வீசிய நட்ராஜன் ஓவரில் டிம் டேவிட் 4 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 26 ரன்களை அணிக்கு சேர்த்தார். கடைசி பந்தில் ரன் அவுட் ஆனாலும் தேவையான ரன்களை அடித்து விட்டு தான் ஆட்டமிழந்தார்.

மும்பை அணிக்கு 12 பந்துகளில் 19 ரன்கள் தேவை.

19வது ஓவர் வீச வந்தார் புவனேஷ்வர் குமார். அவர் அந்த ஓவரில் ஒரு விக்கெட் எடுத்து ஒரு ரன் கூட வழங்கவில்லை. இறுதியில் மும்பை அணி 190 ரன்கள் எடுத்தது. 3 ரன்கள் விதியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றிப் பெற்றது. 

ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது: டெத் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பந்து வீசுகிறோம். அதிலும் புவனேஷ் இந்த ஐபிஎல் தொடரிலேயே சிறந்த பந்து வீச்சாளராக உள்ளார். அவரது (19வது ஓவர்) மெய்டன் விக்கெட் ஆட்டதின் திருப்பு முனையாக அமைந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு திருட்டு: காங்கிரஸ் கையொப்ப இயக்கம் தொடக்கம்

கல்லூரியில் மருத்துவ முகாம்

மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

பசுமை ஹைட்ரஜன் மூலம் மின் உற்பத்தி: என்எல்சி தலைவா் தகவல்

சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT