ஐபிஎல்

சதத்தை தவறவிட்ட மொயின் அலி: ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்கள் இலக்கு 

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. 

DIN

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை இன்று எதிர்கொள்கிறது. அதில், டாஸ் வென்ற கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை அணியில் ஷிவம் துபேவுக்கு பதிலாக ராயுடு இடம்பெற்றுள்ளார். 

சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ், கான்வே ஆகியோர் களமிறங்கினர். ருதுராஜ் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து கான்வேயும் 16 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த மொயின் அலி நிலைத்து ஆடினார். பின் வரிசை வீரர்களில் தோனியை தவிர யாரும் சிறப்பாக விளையாடவில்லை. அவர் 26 ரன்கள் எடுத்தார். 

இதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. அரைசதம் கடந்த மொயின் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT