ஐபிஎல்

ஐபிஎல்: மும்பை அணிக்கு 160 ரன்கள் இலக்கு

DIN

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் தொடரின் 69ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இன்று மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். டெல்லி அணியில் ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர்.

டேவிட் வார்னர் 5 ரன்களில் வெளியேற அடுத்த வந்த மிட்செல் மார்ஷ் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து ப்ரித்வி ஷா 24 ரன்களிலும், சா்ஃப்ராஸ் கான் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 50 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் கேப்டன் ரிஷப் பந்த் களமிறங்கினார். பொறுப்பாக ஆடிய ரிஷப் பந்துக்கு ரோவ்மென் பவெலும் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். 

இந்த இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. அணியின் ஸ்கோர் 125ஆக இருந்தபோது ரிஷப் பந்த் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் பின்னர் பவேலும் 43 ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அக்ஸா் படேல் 19, குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலிங்கில் பும்ரா 3, ரமன்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT