ஐபிஎல்

பஞ்சாப் அணிக்கு 158 ரன்கள் இலக்கு 

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

DIN

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் தொடரின் 70ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணியில் 2 மாற்றங்களும், பஞ்சாப் அணியில் 3 மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. சன்ரைசர்ஸ் அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன், நடராஜன் இடபெறவில்லை.

இருவருக்கும் பதிலாக ரோமாரியோ ஷெஃபெர்ட், ஜெகதீஷா சுசித் ஆகியோர் களமிறங்கினர். எனவே இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை புவனேஷ்வர் குமார் வழிநடத்துகிறார். சன்ரைசர்ஸ் அணியின் தொடக்கக் ஆட்டக்காரர்களாக ப்ரியம் கர்க், அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். கர்க் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி, அபிஷேக் சர்மாவுக்கு ஒத்துழைப்பு அளித்தார்.  ஆனால் ராகுல் திரிபாதி 20 ரன்களில் நடையைக் கட்டினாா்.

தொடர்ந்து எய்டன் மாா்க்ரம் களமிறங்கினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 43 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வரிசை வீரர்களில் நிகோலஸ் பூரன், மார்க்ரம் 21, வாஷிங்டன் சுந்தர் 25, சுசித் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். சன்ரைசர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. ஷெஃபெர்ட் 26 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூா் குடமுழுக்கு விழாவுக்கு ரூ. 3 கோடி செலவு: நகா்மன்ற கூட்டத்தில் தகவல்

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

SCROLL FOR NEXT