கோப்புப்படம் 
ஐபிஎல்

ஷேன் வார்ன் சொர்க்கத்திலிருந்து என்னைப் பார்க்கிறார்: சஹால்

தான் பந்துவீசுவதை சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்ன் சொர்க்கத்திலிருந்து பார்ப்பதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார்.

DIN


தான் பந்துவீசுவதை சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்ன் சொர்க்கத்திலிருந்து பார்ப்பதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ குறிப்பில் சஹால் கூறியதாவது:

"ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இது முதல் சீசன். ஆனால், பல வருடங்களாக விளையாடுவதுபோல் உணர்கிறேன். ஏற்கெனவே இது குடும்பமாகிவிட்டது. இங்கு மனதளவில் சோர்வடையாமல் இருக்கிறேன். இந்த அணியுடன் மிகப் பெரிய அளவில் தொடர்புடன் இருப்பதற்கு இவர்கள் காட்டும் அன்பும், மரியாதையும்தான் காரணம்.

இதன்பிறகு, ஷேன் வார்னேவும் ராஜஸ்தான் ராயல்ஸுக்காக விளையாடியிருப்பது எனக்குக் கூடுதல் சிறப்பானது. அவருடைய ஆசிர்வாதங்கள் எனக்கு உள்ளது. அவர் மேலே இருந்தபடி என்னைப் பார்ப்பதாக உணர்கிறேன்.    

கொல்கத்தாவுக்கு எதிராக 40 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியது மிகவும் சிறப்பானது. காரணம், மிக முக்கியமான தருணத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினேன். மேலும், கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவே எனது முதல் ஹாட்ரிக். அணியை வெற்றி பெறச் செய்வதற்கு நாம் வழிநடத்தும் தருணங்கள் உண்மையில் சிறப்பானது" என்றார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் சஹால் 26 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பந்துவீச்சு சராசரி 16.53. எகானமி 7.67. அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் அவர் முதலிடத்தில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்முறையால் நேபாள உள் துறை அமைச்சர் ராஜிநாமா!

ஓமனை வீழ்த்தியது இந்தியா: வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்!

2கே கேர்ள்... அனுஷ்கா!

ராமரை காணச் செல்கிறேன்:செங்ககோட்டையன்! | செய்திகள்: சில வரிகளில் | 08.09.25 |Sengottaiyan | MKStalin

சந்திர கிரகணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT