ஐபிஎல்

ரஜத் படிதார் அரைசதம்: ராஜஸ்தான் அணிக்கு 158 ரன்கள் இலக்கு 

DIN

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. 

ஐபிஎல் நடப்பு தொடரின் "குவாலிஃபயர் - 2' ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன. அகமதாபாத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பெங்களூரு தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். 

விராத் கோலி 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில்  ரஜத் படிதார் இணைந்தார். இந்த இணை சற்று நிதானம் காட்டியது. ஆனால், கேப்டன் கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி 25 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் பிறகு கிளென் மேக்ஸ்வெல் களம்கண்டார். அதிரடியாக ரன் சேர்த்த அவர் 13 பந்துகளில் 24 ரன்களுக்கு நடையைக் கட்டினார். 

மற்றொரு புறம் சிறப்பாக விளையாடிய ரஜத் படிதார் அரைசதம் கடந்து அசத்தினார். எனினும், அவர், 42 பந்துகளில் 58 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். எஞ்சிய பேட்டர்கள் சொற்ப ரன்னில் வெளியேற பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் பௌலிங்கில் ஓபெட் மெக்காய், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT