ஐபிஎல்

ஏமாற்றமளித்த ராஜஸ்தான்: குஜராத் அணிக்கு 131 ரன்கள் இலக்கு

DIN


ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 131 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி திடலில் நடைபெற்று வருகிறது. 

இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிவருகின்றன. 

முதலில் டாஸ் வென்ற ராஜ்ஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான யாஷஸ்வி ஜெஸ்வால், ஜாஸ் பட்லர் ஆகியோர் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். 

தயாள் வீசிய பந்தை ஜெய்ஸ்வால் தூக்கியடிக்க சாய் கிஷோரிடம் பந்து சிக்கியது. இதனால் ஜெய்ஸ்வால் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் 11 பந்துகளில் 14 ரன்களை மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். 

அதிரடியாக ஆடிவந்த ஜாஸ் பட்லர் 35 பந்துகளில் 39 ரன்களை குவித்தார். எனினும் அவர் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

தொடர்ந்து வந்த படிக்கல் (2), ஹிட்மயர் (11), அஸ்வின் (6), போல்ட் (11) ஆகியோர் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். இதனால் அணியின் ரன் விகிதம் மந்தநிலையிலேயே இருந்தது.

முடிவில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே சேர்த்தது. நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் இரண்டாவது குறைந்தபட்ச ரன் குவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT