ஐபிஎல்

ஐபிஎல் நிறைவு விழா தொடங்கியது

2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் நிறைவு விழா, குஜாராத் மாநிலம் அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

DIN


2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் நிறைவு விழா, குஜாராத் மாநிலம் அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி திடலில் 15வது ஐபிஎல் போட்டியின் நிறைவு விழா, ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரியுடன் தொடங்கியது. பாலிவுட் திரைப்பிரபலங்களும் ஐபிஎல் நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். 

நிறைவு விழாவை அடுத்து இரவு 8 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதில், ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. 

கடந்த 2008-க்கு பின் தற்போது தான் ராஜஸ்தான் அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி உள்ளது. ஆனால் அறிமுகமான முதல் தொடரிலேயே இறுதிச்சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது குஜராத்.

2008ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணியின் வீரர்களை கெளரவப்படுத்த அப்போதைய அணியில் இடம்பெற்றிருந்தவர்களுக்கு நடப்பாண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முனாப் பட்டேல், யூசுப் பதான், ரவீந்திர ஜடேஜா, ஷேன் வாட்சன், சித்தார்த் திரிவேதி ஆகியோருக்கு ராஜஸ்தான் அணி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளில் குஜராத் 14 ஆட்டங்களில் 10 வெற்றியுடன் 20 புள்ளிகளையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 14 ஆட்டங்களில் 9 வெற்றியுடன் 18புள்ளிகளையும் பெற்று முதலிரண்டு இடங்களைப் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”அந்தக் கேள்வி அவர்கிட்ட கேட்டேன்” விட்டுக் கொடுக்காமல் பேசிய Ravi Mohan!

Ravi Mohan, S.J. Suryah-வை கலாய்த்த Sivakarthikeyan!

வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த பிரியங்கா, ரேவந்த் ரெட்டி!

பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!

'வருந்தச் செய்யும்' ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு! யாருக்குத்தான் டிக்கெட் கிடைக்கிறது?

SCROLL FOR NEXT