ஹார்திக் பாண்டியா
ஹார்திக் பாண்டியா  படம் | ஐபிஎல்
ஐபிஎல்

கேப்டனாக நியமிக்கப்பட்டது ஹார்திக் பாண்டியாவின் தவறல்ல: சௌரவ் கங்குலி

DIN

மும்பை இந்தியன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஹார்திக் பாண்டியாவின் தவறல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதற்கு ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர். போட்டிகளின்போதும் ஹார்திக் பாண்டியா ரசிகர்களின் கேலி கிண்டல்களுக்கு ஆளானார்.

இந்த நிலையில், ரசிகர்கள் ஹார்திக் பாண்டியாவை கேலி செய்யக் கூடாது எனவும், மும்பை இந்தியன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஹார்திக் பாண்டியாவின் தவறல்ல எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சௌரவ் கங்குலி

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரசிகர்கள் ஹார்திக் பாண்டியாவை தேவையில்லாமல் விமர்சிப்பதும், கேலி செய்வதும் கூடாது என நினைக்கிறேன். அது சரியல்ல. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அந்த அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியாவை நியமித்துள்ளது. விளையாட்டில் கேப்டன்சி மாற்றங்கள் என்பது நடக்கக் கூடியதுதான். நீங்கள் இந்திய அணியை வழிநடத்தினாலும், ஒரு மாநிலத்தின் கிரிக்கெட் அணியை வழிநடத்தினாலும், டி20 லீக் தொடரின் அணியை வழிநடத்தினாலும் நீங்கள் கேப்டனாகவே நியமிக்கப்பட்டுள்ளீர்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய அணிக்காக கேப்டனாகவும், ஒரு வீரராகவும் தனது சிறப்பான பங்களிப்பை அவர் வழங்கியுள்ளார். மும்பை அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் அவரது தவறு ஒன்றுமில்லை. நாம் அனைவரும் அதனை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (ஏப்ரல் 7) நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ், தில்லி கேப்பிடல்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT