ஐபிஎல்

ஹைதராபாத்தின் நம்பிக்கை நாயகன் ‘நிதீஷ் குமார்’ கூறியது என்ன?

ஹைதராபாத் அணியின் புதிய நட்சத்திரம் நிதீஷ் குமார் போட்டி முடிந்தப் பிறகு கூறியதாவது...

DIN

ஐபிஎல் போட்டியின் 23-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுக்க, பஞ்சாப் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்களே எடுத்தது.

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியை சேர்ந்த நிதீஷ் குமார் ரெட்டி பேட்டிங்கில் 37 பந்துகளில் 63 ரன்கள், பௌலிங்கில் 3 ஓவர்களுக்கு 33 ரன்கள் 1 விக்கெட், 1 கேட்ச் என ஃபீல்டிங்கிலும் அசத்தினார்.

ஆட்ட நாயகன் விருது வென்ற நிதீஷ் குமார் ரெட்டி கூறியதாவது:

எனது அணிக்கும் எனக்கும் இது மிகப்பெரிய பங்களிப்பு. நான் எப்போதும் எனக்குள்ளே சொல்லிகொள்ளும் விசயம் என்னை நான் முதலில் நம்பவேண்டும் என்பதே. பஞ்சாப் அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பால்க வீசினார்கள். அதனால் ஸ்பின்னருக்காக காத்திருந்தேன். அதன்படியே அவர்கள் பந்து வீசியதும் அவர்களை டார்கெட் செய்து அடித்தேன். இந்தத் தொடர் முழுவதும் மெதுவான பௌன்சர்கள் மிகவும் உதவிகரமாக இருந்து வருகின்றன. ஆடுகளத்தின் வடிவத்துக்கு ஏற்ப எந்தப் பக்கம் சிக்ஸர்கள் அடிக்க கடினமோ அந்தப் பக்கம் பந்துகள் வீசி விக்கெட் எடுத்தேன். பேட்டிங்,பௌலிங், ஃபீல்டிங்கில் இதே மாதிரியான செயல்பாடுகளை தொடர்ந்து செய்ய வேண்டுமென நினைக்கிறேன் எனக் கூறினார்.

கேப்டன் கம்மின்ஸ் இவரை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “சூப்பர் ஸ்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

இதுகூட தெரியாமல் எப்படி ஒரு கட்சித் தலைவராக இருக்க முடியும்? விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதில்

தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!

"தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழர்கள்..." Vijay பேச்சு!

SCROLL FOR NEXT