ஐபிஎல்

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

Sasikumar

ஜடேஜா, தோனியின் சிறப்பான ஆட்டத்தால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது.

ஐபிஎல் தொடரின் 34ஆவது லீக் ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னௌ மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியில் டேரல் மிட்சலுக்கு பதிலாக மொயில் அலி களமிறக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னையில் அணியின் அஜிங்க்யா ரஹானே, ரச்சின் ரவீந்திரா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

ரவீந்திரா வந்த வேகத்திலேயே ரன் எதுவும் அடிக்காமல் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ருதுராஜ் களம்கண்டார். அவர் 17 ரன்களில் ஆட்டமிழக்க ஜடேஜா உள்ளே வந்தார். மற்றொரு புறம் நன்றாக விளையாடிய ரஹானே 36 ரன்களுக்கு வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே 3, சமீர் ரிஸ்வி 1 என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் சென்னை அணியின் ஸ்கோர் ஒருகட்டத்தில் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

பின்னர் வந்த மொயின் அலி 20 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இருப்பினும் சிறப்பாக விளையாடிய ஜடேஜா அரைசதம் கடந்து அசத்தினார். இந்த நிலையில் கடைசி வரிசையில் களம்கண்ட தோனி வழக்கம்போல் அதிரடியை வெளிப்படுத்தினார். அவர் 9 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. ஜடேஜா 57, தோனி 28 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தனர்.

லக்னௌ அணியில் அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இடைவேளைக் காட்சியை ரசிகர்களுடன் காண ஆவல்: லோகேஷ் கனகராஜ்

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

SCROLL FOR NEXT