முகப்பு
ஐபிஎல்

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 26 ஏப்ரல், 2024 at 1:49 PM
- படம் | ஐபிஎல்
பகிர்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரண் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட் செய்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் காயம் காரணமாக மிட்செல் ஸ்டார்க் இன்றையப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக துஷ்மந்தா சமீரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் அணியைப் பொறுத்தவரையில் லியம் லிவிங்ஸ்டன் இன்றையப் போட்டியில் விளையாடவில்லை. ஜானி பேர்ஸ்டோ மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.