மகிழ்ச்சியில் ஆர்சிபி வீரர்கள் 
ஐபிஎல்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற மகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்ஸி பேசியுள்ளார்.

DIN

ஐபிஎல் போட்டியின் 41-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 35 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை அதன் சொந்த மண்ணிலேயே வியாழக்கிழமை வென்றது.

முதலில் பெங்களூரு 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் எடுக்க, ஹைதராபாத் 20 ஓவா்களில் விக்கெட்டுகள் இழப்புக்கு ரன்களே சோ்த்தது.

தொடா்ந்து 6 தோல்விகளுடன் துவண்டிருந்த பெங்களூரு, இந்த வெற்றியால் மீண்டிருக்கிறது.

மகிழ்ச்சியில் ஆர்சிபி வீரர்கள்

இது குறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி பேசியதாவது:

கடைசி 2 போட்டிகளில் தோல்வியுற்றாலும் அற்புதமான பதிலடியை கொடுத்தோம். ஆனாலும் குழுவாக நம்பிக்கையை பெற வெற்றி பெற்றாக வேண்டும். பொய்யான நம்பிக்கையை குழுவுக்கு அளிக்க முடியாது. இந்த மாதிரியான செயல்பாடுகளே நிஜமான நம்பிக்கையைத் தரும். இந்த இரவு நிம்மதியாக தூங்குவோம்.

ஐபிஎல் தொடரில் போட்டிகள் வலுவாக இருக்கின்றன. அத்துடன் அணிகளும் மிக வலுவாக இருக்கின்றன. நமது 100 சதவிகிதத்தை கொடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இல்லையெனில் தோல்விகளே எஞ்சும். முதல் பாதி தொடரில் விராட் கோலி மட்டுமே ரன்கள் அடித்தார். தற்போது பலரும் ரன்களை அடிக்கிறார்கள். சின்னசாமி மைதானத்தில் பந்து விசுவது மிகவும் கடினம். அதற்கான வழியை கண்டுபிடித்து விட்டோம்; ஆனாலும் அது கடினமாக இருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெளர்ணமி நிலவு... ஜனனி!

தெய்வீக ராகம்... மிருணாள் தாக்குர்!

பானிபூரி விற்ற முன்னாள் ஐடி ஊழியர்.. கர்ப்பிணி மனைவி தற்கொலையில் மர்மம்!

ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்று இந்திய இளம் வீரர் SM யுகன் சாதனை! | SM YUGAN

ஹீரோவின் இரண்டு புதிய பைக்குகள்! குறைந்த விலையில்...

SCROLL FOR NEXT