வில் ஜாக்ஸ் படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் வில் ஜாக்ஸ் 41 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

DIN

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் வில் ஜாக்ஸ் 41 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆர்சிபி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் பெங்களூரு வீரர் வில் ஜாக்ஸ் அதிரடியாக 41 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். 31 பந்துகளில் அரைசதம் கடந்த அவர் அடுத்த 10 பந்துகளில் சதம் விளாசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவர் 41 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதம் இதுவாகும். முன்னதாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட் பெங்களூருவுக்கு எதிராக 39 பந்துகளில் சதம் அடித்தார்.

ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிவேக சதங்கள்

கிறிஸ் கெயில் - 30 பந்துகளில் - புணே வாரியர்ஸுக்கு எதிராக, 2013

யூசுஃப் பதான் - 37 பந்துகளில் - மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக, 2010

டேவிட் மில்லர் - 38 பந்துகளில் - ஆர்சிபிக்கு எதிராக, 2013

டிராவிஸ் ஹெட் - 39 பந்துகளில் - ஆர்சிபிக்கு எதிராக, 2024

வில் ஜாக்ஸ் - 41 பந்துகளில் - குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக, 2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு!

பாகிஸ்தானின் அபார பந்துவீச்சில் 110 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து!

ஏமாற்றத்தைக் கொடுத்த ஜன நாயகன் வழக்கு தீர்ப்பு!

உ.பி.யில் தொடரும் அவலம்..! நள்ளிரவில் அம்பேத்கர் சிலை உடைப்பு!

அமெரிக்காவில் உறைபனி, பனிப்புயலுக்கு 15 பேர் பலி!

SCROLL FOR NEXT