2024ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை (மார்ச் 22) முதல் தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கடந்த 15ஆண்டுகளாக ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. அந்த வரலாற்றை மாற்ற ஆர்சிபி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஏற்கெனவே இறங்கிவிட்டனர்.
இந்த ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்குமென்பதால் வின்டேஜ் தோனியைப் போலவே தலைமுடியை வளர்த்து வருவதாக ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகிறார்கள்.
நேற்றையப் பயிற்சியில் தனது மிகவும் பிரபலமான ஹெலிகாப்டர் ஷாட்டினை அடித்த விடியோ இணையத்தில் வைரலாகியது.
இந்நிலையில் பிரபல சிகையலங்கார நிபுணர் ஆலிம் ஹகிம் தோனியின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “நமது ஒரே ஒரு தல மகேந்திர சிங் தோனி” எனப் பதிவிட்டுள்ளார். இந்த வின்டேஜ் ஸ்டைலில் இருக்கும் தோனியின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
சென்னை ரசிகர்கள் தோனியை அன்போடு தல தோனி என்றழைக்கிறார்கள். இதனைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.