மதீஷா பதிரானா படம் | சிஎஸ்கே (எக்ஸ்)
ஐபிஎல்

சென்னை சூப்பர் கிங்ஸுடன் இணைந்த பதிரானா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா இணைந்துள்ளார்.

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா இணைந்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சென்னை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவரான மதீஷா பதிரானா இடம்பெறவில்லை.

காயம் காரணமாக அணியுடன் அவர் பயிற்சி முகாமில் இணையவில்லை. ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டிகள் சிலவற்றில் அவர் விளையாடமாட்டார் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், சென்னை அணியுடன் பதிரானா இணைந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக சென்னை அணி நிர்வாகம் எக்ஸ் தளத்தில் விடியோ ஒன்றினையும் பதிவிட்டுள்ளது.

அந்த விடியோ பின்வருமாறு

சிஎஸ்கே தனது அடுத்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அந்தப் போட்டியில் பதிரானா விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT