விராட் கோலி  படம் | PTI
ஐபிஎல்

ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

ஐபிஎல் போட்டியில் விராட் கோலி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

DIN

ஐபிஎல் போட்டியில் விராட் கோலி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

ஐபில் தொடரில் பெங்களூருவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் பெங்களூரு முதலில் பேட் செய்தது. அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 59 பந்துகளில் 83 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இன்றையப் போட்டியில் 4 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரராக அவர் மாறியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள்

விராட் கோலி - 240 சிக்ஸர்கள்

கிறிஸ் கெயில் - 239 சிக்ஸர்கள்

ஏபி டி வில்லியர்ஸ் - 238 சிக்ஸர்கள்

கிளன் மேக்ஸ்வெல் - 67 சிக்ஸர்கள்

டு பிளெஸ்ஸி - 50 சிக்ஸர்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி

சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி அதிகரிப்பு! அமெரிக்க ஏற்றுமதி குறைவு!!

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

கிணறுக்குள் குதித்த பெண்! காப்பாற்றச் சென்ற தீயணைப்பு வீரர் உள்பட மூவர் பலி!!

SCROLL FOR NEXT