படங்கள்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் / எக்ஸ்
ஐபிஎல்

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பிரபலமான ரசிகரை லக்னௌ அணி கௌரவித்துள்ளது.

DIN

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பிரபலமான ரசிகரை லக்னௌ அணி கௌரவித்துள்ளது.

செப்பாக்கத்தில் நடைபெற்ற லக்னௌ சிஎஸ்கே போட்டியில் லக்னௌ அணி வென்றது. அந்தப் போட்டியில் மஞ்சள் நிற கூட்டமான சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் ஒரேயொரு லக்னௌ அணி வீரராக கொண்டாடும் காட்சிகள் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த நபரின் பெயர் வெங்கடேஷ். அவர் கே.எல்.ராகுல் ரசிகர். அதனால் லக்னௌ அணிக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளார்.

லக்னௌ அணி அவரை அழைத்து கே.எல். ராகுலை சந்திக்க வைத்தது. மேலும் அவர் பேசிய விடியோவினையும் வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியதாவது:

அதில் சேப்பாக்கம் மைதானமே அமைதியாக இருந்தது. 16 -20 ஓவர்களில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். எந்த நாளை விடவும் அன்று மகிழ்ச்சியாக இருந்தேன். மஞ்சள் நிற அலைகளின் மத்தியில் நான் மட்டுமே லக்னௌ அணி ஜெர்ஸி அணிந்திருந்தேன். அன்று எனக்கு நிறைய அழைப்புகள் வந்தன.

மீம்ஸ்களால் நான் பிரபலமானேன். 1000 லக்னௌ ரசிகர்களுக்கு மத்தியில் நான் சிறப்பு விருந்திரானாக அழைக்கப்பட்டேன் போலிருந்தது. நான் என் கனவிலும் இப்படி எல்லாம் நடக்கும் என நினைத்தது இல்லை. அவரைச் சந்திக்கும் போது வார்த்தைகள் வரவில்லை. இப்போதும் கைகள் நடுங்குகின்றன. மறக்க முடியாத அனுபவம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT