தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!
ஐபிஎல் தொடரில் தில்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் தில்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, தில்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட் செய்கிறது.
Advertisement
Advertisement
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. துருவ் ஜுரெல் மற்றும் ஹெட்மேயர் அணியில் இல்லை. ஷுபம் துபே மற்றும் டோனோவன் பெரேரைரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தில்லி அணியில் இஷாந்த் சர்மா மற்றும் குல்பதீன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம், இன்றையப் போட்டியில் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் (குல்பதீன் மற்றும் டோனோவன் பெரேரைரா) அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.