விராட் கோலி Ravi Choudhary
ஐபிஎல்

சுயமரியாதைக்காக விளையாட விரும்பினோம்: விராட் கோலி!

ஆட்ட நாயகன் விராட் கோலி எண்ணிக்கையைவிட தரமே முக்கியம் எனக் கூறியுள்ளார்.

DIN

ஐபிஎல் போட்டியின் 58-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 60 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.

முதலில் பெங்களூரு 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் சோ்க்க, பஞ்சாப் 17 ஓவா்களில் 181 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்த வெற்றியின் மூலம் பிளே-ஆஃப் பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது பெங்களூரு.

அதிரடியாக விளையாடிய விராட் கோலி 92 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

ஆட்ட நாயகன் விருது பெற்ற பின் விராட் கோலி பேசியதாவது:

என்னைப்பொறுத்த வரையில் ரன்களின் எண்ணிக்கையைவிட தரமே முக்கியமானது. எனக்கு இந்த தத்துவம் நன்றாக வேலை செய்கிறது. விளையாட்டினை புரிந்துகொண்டு விளையாடும்போது பயிற்சி குறைவாக தேவைப்படுகிறது. இதற்கு முன்பு நாம் என்ன செய்தேனோ அதையே செய்தால் போதுமானதாக இருக்கிறது. இருப்பினும் போட்டியில் சிறப்பாக செயல்பட சில இடங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. இது ஒரு படிப்படியான பரிணாமத்தைச் சார்ந்தது.

சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஸ்லாக் ஸ்வீப் ஷாட் அடித்தேன். அதற்காக தனியாக பயிற்சி எடுக்கவில்லை. ஆனால் முந்தைய காலத்தில் ஆடியிருக்கிறேன். சுழல் பந்துக்கு எதிராக அதிரடியாக ஆட வேண்டியுள்ளது. ரிஸ்க் எடுக்க வேண்டும் என தெரியும். அதை ஒரு தீர்க்கமான முடிவுடன் எடுத்தேன்.

ஸ்டிரைக் ரேட்டினையும் சரியாக வைத்துகொள்ள முயன்றேன். அது எனக்கும் எனது அணிக்கும் உதவியது. இந்தத் தொடரில் நாங்கள் நேர்மையாக விளையாடுவது மட்டுமே எங்களுக்கு இருக்கும் ஒரே வழியாகும். தொடர் தோல்வியில் இருக்கும்போது எங்களுக்குள் நேர்மறையான விவாதம் தேவைப்பட்டது. கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் த்ரில்லிங்காக சென்றது. நாங்கள் எங்களது சுயமரியாதைக்காக விளையாட விரும்பினோம். கடமைக்காக சென்று விளையாடி எங்களது ரசிகர்களை வருத்தமடைய விடக்கூடாது. அணியாக நம்பிக்கை மீண்டும் வந்துள்ளது. நாங்கள் மற்ற விஷயங்களை சார்ந்திருக்காமல் தொடரின் தொடக்கத்தில் நன்றாக விளையாடியிருக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் மழை, வெள்ளம்! தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட சாலைகள் மற்றும் வீடுகள்!

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

டபுள் டெக்கா் பேருந்து சேவையை தொடக்கி வைத்தார் முதல்வா் ஸ்டாலின்

அன்புமணி ஆதரவு 3 எம்.எல்.ஏ-க்கள் பாமகவில் இருந்து நீக்கம்

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62!

SCROLL FOR NEXT