எம்.எஸ்.தோனி  படம் | சிஎஸ்கே (எக்ஸ்)
ஐபிஎல்

வயது முதிர்ந்த போதிலும்... எம்.எஸ்.தோனிக்காக சிஎஸ்கேவின் தரமான பதிவு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பாராட்டும் விதமாக சிஎஸ்கே அணி நிர்வாகம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பாராட்டும் விதமாக சிஎஸ்கே அணி நிர்வாகம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், ஆட்டத்தின் இறுதியில் சிக்ஸர்களை பறக்கவிட்டு தோல்விக்கான ரன்கள் வித்தியாசத்தை குறைத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தார் எம்.எஸ்.தோனி.

இந்த நிலையில், சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் தோனியைப் பாராட்டி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

எக்ஸ் வலைத்தளத்தில் சிஎஸ்கே தரப்பில் பதிவிடப்பட்டுள்ளதாவது:

வயது முதிர்ந்த போதிலும்..

வலிகள் மிகுந்த போதிலும்..

வலிமை குறைந்த போதிலும்..

வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!

எனப் பதிவிடப்பட்டுள்ளது.

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் எம்.எஸ்.தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் (ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாய நிலத்திற்குள் நுழைந்த யானை! பாதுகாப்பாக காட்டிற்குள் விரட்டிய வனத்துறையினர்!

அமெரிக்க பொண்ணு - இந்திய பையன்! காதலா, நிச்சயித்த திருமணமா? வைரலான விடியோ

பெரியவர் தோழர் தமிழரசன்

ஆவணி மாதப் பலன்கள் - துலாம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!

SCROLL FOR NEXT