படம் | சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (எக்ஸ்)
ஐபிஎல்

ஆல்ரவுண்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்களை பாதிக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி: ஷாபாஸ் அகமது

இம்பாக்ட் பிளேயர் விதி ஆல்ரவுண்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்களையே அதிகம் பாதித்துள்ளதாக ஷாபாஸ் அகமது தெரிவித்துள்ளார்.

DIN

இம்பாக்ட் பிளேயர் விதி ஆல்ரவுண்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்களையே அதிகம் பாதித்துள்ளதாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழற்பந்துவீச்சாளரான ஷாபாஸ் அகமது தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஷாபாஸ் அகமது 186 ரன்கள் எடுத்துள்ளார். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான அவர், பந்துவீச்சில் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

இந்த நிலையில், இம்பாக்ட் பிளேயர் விதி ஆல்ரவுண்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்களையே அதிகம் பாதித்துள்ளதாக ஷாபாஸ் அகமது தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இம்பாக்ட் பிளேயர் விதியால் தற்போது ஒவ்வொரு அணியிலும் 9 பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். ஒரு ஆல்ரவுண்டர் மற்றும் 8 பேட்ஸ்மேன்கள். அணிகளும் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடும் வீரர்களைத் தேர்வு செய்கின்றனர். இம்பாக்ட் பிளேயர் விதி ஆல்ரவுண்டர்களைக் காட்டிலும், பந்துவீச்சாளர்களை பெரிதும் பாதித்துள்ளது. ஏனெனில், இம்பாக்ட் பிளேயர் விதி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தமின்றி சுதந்திரமாக விளையாடும் சூழலை உருவாக்குகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

SCROLL FOR NEXT