ஹார்திக் பாண்டியா படம் | ஐபிஎல்
ஐபிஎல்

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது கடினமாக இருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

DIN

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது கடினமாக இருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் 10 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது கடினமாக இருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: சற்று கடினமாக இருக்கிறது. நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த உலகம் போட்டி நிறைந்தது. வெளியில் வந்து நமது சிறப்பான முயற்சியை வெளிப்படுத்தி சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். நாங்கள் தரமான அல்லது ஸ்மார்ட்டான கிரிக்கெட்டை விளையாடவில்லை. எங்கு தவறு நடந்தது என்பதை விரைவில் குறிப்பிட முடியவில்லை. நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதுமே எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. மற்றப் போட்டிகளைப் போலவே லக்னௌவுக்கு எதிரான இன்றைய தோல்வியையும் கடந்து செல்ல வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT