ஆர்சிபி அணியால் ஏலத்தில் வாங்கப்படுவதற்கு முன்பு தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக நினைத்ததாக அந்த அணியின் ஸ்வப்னில் சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் சிங்ஸை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. வருகிற மே 22 ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறவுள்ள எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், ஆர்சிபி அணியால் ஏலத்தில் வாங்கப்படுவதற்கு முன்பு தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக நினைத்ததாக ஸ்வப்னில் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் ஏலத்தின்போது ஒரு போட்டியில் விளையாடுவதற்காக தர்சமசாலாவுக்கு சென்று கொண்டிருந்தேன். இரவு 7-8 மணிக்கு அங்கு சென்றடைந்தேன். அதுவரையிலும் என்னை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. எனது பெயர் முதல் சுற்றில் ஏலத்தில் எடுக்கப்படவில்லையென்றவுடன், அவ்வளவுதான் முடிந்தது என நினைத்துக் கொண்டேன். இந்த ஆண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாடிவிட்டு, தேவைப்பட்டால் அடுத்த ஆண்டு போட்டியிலும் விளையாடிவிட்டு எனது கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன்.
நான் மிகவும் ஏமாற்றத்துடன் இருந்தேன். ஆனால், எனது குடும்பத்தினர் அழைத்து ஆர்சிபியில் உன்னை ஏலத்தில் எடுத்துள்ளனர் எனக் கூறினார்கள். நாங்கள் அனைவரும் மிகுந்த உணர்ச்சி வசத்துக்கு ஆளானோம். ஏனென்றால், இந்த பயணம் எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை வேறு யாராலும் புரிந்துகொள்ள முடியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.