படம் | ஐபிஎல்
ஐபிஎல்

சொந்த மண்ணில் சந்தித்த தோல்விகள் ஏமாற்றமளித்தது: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

சொந்த மண்ணில் நடைபெற்ற 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

DIN

சொந்த மண்ணில் நடைபெற்ற 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது. இதன்மூலம், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்தது.

இந்த நிலையில், சொந்த மண்ணில் நடைபெற்ற 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ளவில்லை. மற்ற மைதானங்களில் நடைபெற்ற 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றோம். ஆனால், சொந்த மண்ணில் விளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றோம். சொந்த மண்ணில் எங்களது தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இரண்டு போட்டிகளில் வெற்றிக்கு மிக அருகில் சென்று தோல்வியடைந்தோம் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 5 வெற்றிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்து நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT