முகப்பு
ஐபிஎல்

இலங்கை பிரீமியர் லீக்கில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சிஎஸ்கே வீரர்!

இலங்கை பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸின் இளம் வேகப் பந்துவீச்சாளர் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

Updated On : 21 மே, 2024 at 12:30 PM
- படம் | ஐபிஎல்
பகிர்:

இலங்கை பிரீமியர் லீக் தொடரில் இளம் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானாவை 99.98 லட்சத்துக்கு கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவராக மதீஷா பதிரானா வலம் வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இருப்பினும், அவரால் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது.

இந்த நிலையில், இலங்கை பிரீமியர் லீக் தொடரில் இளம் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானாவை 99.98 லட்சத்துக்கு கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மதீஷா பதிரானா

ஐபிஎல் ஏலத்தில் மதீஷா பதிரானா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.