அஸ்வனி குமார் படம் | மும்பை இந்தியன்ஸ் (எக்ஸ்)
ஐபிஎல்

ஐபிஎல் அறிமுகப் போட்டியில் அசத்திய டாப் 5 பந்துவீச்சாளர்கள்!

ஐபிஎல் அறிமுகப் போட்டியில் அசத்திய டாப் 5 பந்துவீச்சாளர்கள் குறித்து...

DIN

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அஜிங்க்யா ரஹானே, ரிங்கு சிங், மணீஷ் பாண்டே மற்றும் ஆண்ட்ரே ரஸலின் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி அசத்தினார். ஐபிஎல் அறிமுகப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

ஐபிஎல் அறிமுகப் போட்டியில் அசத்திய டாப் 5 பந்துவீச்சாளர்கள் விவரம்

6/12 - அல்சாரி ஜோசப் (மும்பை இந்தியன்ஸ்) - சன்ரைசர்ஸுக்கு எதிராக, 2019

5/17 - ஆண்ட்ரூ டை (குஜராத் லயன்ஸ்) - ரைசிங் புணே சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக, 2017

4/11 - சோயப் அக்தர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) - தில்லி டேர்டேவில்ஸுக்கு எதிராக, 2008

4/24 - அஸ்வனி குமார் (மும்பை இந்தியன்ஸ்) - கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக, 2025

4/26 - கெவான் கூப்பர் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக, 2012

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

Fake Dating! | சமூக வலைதளத்தில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

SCROLL FOR NEXT