ரிஷப் பந்த், சஞ்சீவ் கோயங்கா.  படங்கள்: பிடிஐ, எக்ஸ் / எல்.எஸ்.ஜி.
ஐபிஎல்

சொந்த மண்ணில் லக்னௌ தோல்வி: சஞ்சீவ் கோயங்கா கூறியதென்ன?

லக்னௌ அணியின் தோல்வி குறித்து அதன் நிறுவனத் தலைவர் பேசியதாவது...

DIN

லக்னௌ அணி தனது சொந்த மண்ணில் தோல்வியடைந்தது குறித்து அதன் நிறுவனத் தலைவர் சஞ்சீவ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார்.

கடந்த 2022இல் இருந்து லக்னௌ அணி ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு சீசனில் பிளே-ஆஃப் சென்ற லக்னௌ அணி கடைசி முறை 7ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

லக்னௌ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை அதன் நிறுவனத் தலைவர் சஞ்சீவ் கோயங்கா நேரலையில் திட்டியதை பலரும் பார்த்தனர். எதிர்பார்த்த மாதிரியே அவர் இந்தாண்டு தில்லி அணிக்கு மாறினார்.

அவருக்குப் பதிலாக தற்போது ரிஷப் பந்த கேப்டனாக இருக்கிறார். ரிஷப் பந்த்தும் மூன்று போட்டிகளில் மோசமாக விளையாடி வருகிறார். அத்துடன் 2 போட்டிகளில் லக்னௌ அணி தோல்வியுற்றது.

இதனால் சமூக வலைதளங்களில் பலரும் சஞ்சீவ் கோயங்கா ரிஷப் பந்தினை வருத்தெடுத்திருப்பார் என கணித்தனர்.

சில புகைப்படங்களில் ரிஷப் பந்த்துடன் அவர் பேசும் வித்ததினையும் சுட்டிக்காட்டி விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் சஞ்சீவ் கோயங்கா விடியோ வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:

நாம் நினைத்த முடிவு நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், லக்னௌ அணியில் பல திறமைசாளிகள் இருக்கிறார்கள். மீண்டும் திரும்பிவரும் மன உறுதி இருக்கிறது.

அணிக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் மிக்க நன்றி. ஒவ்வொரு சவாலும் ஒரு பாடம்தான். அதிலிருந்து நாம் கற்றுக்கொண்டு பலமாக திரும்பி வருவோம்.

உங்களுக்கென்று வருத்தம் இருந்தால் அதை இந்த மாலையே விட்டுவிடுங்கள். நாளை புதிய நாளாக புத்துணர்வுடன் தொடங்குங்கள்.

நமக்கென சிறப்பான அணி இருக்கிறது. நீங்கள் உங்களை நம்புங்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைம்பெண்கள் உதவித்தொகையை உயா்த்தக் கோரிக்கை

குறைதீா் கூட்டத்தில் 250 மனுக்கள் அளிப்பு

இளைஞா்களுக்கு தொழில் பழகுநா் ஆணை

பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி

வளா்ச்சி குன்றிய சகோதரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT