சூர்யகுமார் யாதவுக்கு 100 என்ற எண் அச்சிட்ட சீருடையை வழங்கி கௌரவித்த பொல்லார்ட். 
ஐபிஎல்

மும்பை அணிக்காக 100-வது போட்டியில் சூர்யகுமார் யாதவ்!

மும்பை அணிக்காக 100-வது போட்டியில் சூர்யகுமார் யாதவ்..

DIN

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் இன்று 100-வது போட்டியில் விளையாடுகிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் எகானா மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை - லக்னௌ அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளது.

100-வது போட்டியில் விளையாடும் சூர்யகுமார் யாதவுக்கு முன்னாள் மும்பை வீரரும், மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் 100 என்ற எண் அச்சிட்ட சீருடையை வழங்கி கௌரவித்தார். 100 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார், மும்பை அணிக்காக 3090 ரன்கள் குவித்துள்ளார்.

மும்பை அணிக்காக அதிக ஐபிஎல் போட்டிகள்

  • ரோஹித் சர்மா – 215

  • கீரன் பொல்லார்ட் – 189

  • ஹர்பஜன் சிங் - 136

  • ஜஸ்பிரித் பும்ரா - 133

  • லசித் மலிங்கா - 122

  • அம்பத்தி ராயுடு - 114

  • ஹார்திக் பாண்டியா – 109

  • சூர்யகுமார் யாதவ் – 100

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் வருவாய் 5% அதிகரிப்பு!

ரத்தக் கொதிப்பில்தான் கருப்புப் பட்டை அணிந்தோம்: இபிஎஸ்

கூகுளுடன் கைகோக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்: ஏஐ தொழில்நுட்பத்தில் இசை!

பாக்., - ஆப்கன் எல்லை மோதல்! 48 மணிநேர போர் நிறுத்தம் அமல்!

தம்மம் புரமோஷன்... ரஷ்மிகா மந்தனா!

SCROLL FOR NEXT