விராட் கோலி.. 
ஐபிஎல்

13,000 ரன்கள் விளாசிய ஒரே இந்தியர்.! டி20-ல் புதிய சாதனை படைத்த விராட் கோலி!

டி20-ல் 13,000 ரன்கள்..! புதிய சாதனை படைத்த விராட் கோலி.

DIN

டி20 போட்டிகளில் 13,000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஆர்சிபி வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய வீரர் அரைசதம் கடந்து அசத்தினார். இது விராட் கோலி 99-வது அரைசதமாகவும் பதிவானது. முடிவில், 67 ரன்களில் அவுட்டானார்.

இதையும் படிக்க: டி20-யில் 200* விக்கெட்டுகள்: சாதனை படைத்த ஹார்திக் பாண்டியா!

இந்தப் போட்டியில் விராட் கோலி 17 ரன்களைக் கடந்தபோது டி20 போட்டிகளில் 13,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல், இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் உள்ளிட்டோர் வரிசையில், விராட் கோலி 13000 ரன்களை கடந்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்

  • 14562 - கிறிஸ் கெய்ல் (381 போட்டிகள்)

  • 13610 - அலெக்ஸ் ஹேல்ஸ் (474 போட்டிகள்)

  • 13557 - சோயிப் மாலிக் (487 போட்டிகள்)

  • 13537 - கீரான் போலார்டு (594 போட்டிகள்)

  • 13001* - விராட் கோலி (386 போட்டிகள்)

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அவர் ஐபிஎல்லில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். இவ்வாறு, அவர் தொடர்ந்து விளையாடி அதிக ரன்கள் குவிக்கும்பட்சத்தில் முதலிடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: ரசிகர்களுடன் அடிதடி: பாகிஸ்தான் வீரரை தரதரவென இழுத்துச் சென்ற பாதுகாவலர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

SCROLL FOR NEXT