அரைசதமடித்த சாய் சுதர்ஷன்.  படம்: ஏபி
ஐபிஎல்

சாய் சுதர்ஷன் 82: ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 217/6 ரன்கள் குவித்தது.

DIN

ஐபிஎல் போட்டியின் 23-ஆவது போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 3ஆவது ஓவரில் முதல் விக்கெட் கிடைத்தது.

அடுத்ததாக ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன், ஜாஸ் பட்லர் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.

பட்லர் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த ஷாருக்கான் அதிரடியாக விளையாடி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சாய் சுதர்ஷன் 82 ரன்களுக்கு ஆட்டமிழக்க ரஷித் கான் 4 பந்துகளில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 217/6 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் சார்பில் தீக்‌ஷனா, தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளும் சந்தீப் சர்மா, ஆர்ச்சர் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

இந்தப் போட்டியில் குஜராத் அணி வென்றால் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் டைட்டன்ஸ் ஸ்கோர் கார்டு

ஷுப்மன் கில் - 2

சாய் சுதர்ஷன் - 82

ஜாஸ் பட்லர் - 36

ஷாருக்கான் - 36

ரூதர்ஃபோர்டு - 7

தெவாட்டியா - 24*

ரஷித் கான் - 12

அர்ஷத் கான் - 0*

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT