சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளெமிங் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் படம் | சென்னை சூப்பர் கிங்ஸ் (எக்ஸ்)
ஐபிஎல்

எரிச்சலடையச் செய்யும் சிஎஸ்கே ஃபீல்டிங்..! பயிற்சியாளர் ஃபிளெமிங் ஆதங்கம்!

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் பேசியதாவது...

DIN

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் காட்டமான கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை நேற்று (ஏப்.8) சாய்த்தது.

இது குறித்து ஸ்டீஃபன் ஃபிளெமிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இதுவரை சிஎஸ்கே அணிக்கு எரிச்சலடையச் செய்யும் சீசனாகவே இருந்து வருகிறது. கேட்ச்சிங்கிலும் மோசமாக செயல்பட்டார்கள். கடைசி போட்டியில் இரண்டு அணிகளுமே அப்படித்தான் இருந்தன.

11 கேட்ச்சுகளை தவறவிட்ட சிஎஸ்கே

இதுவரை நடந்த சிஎஸ்கே போட்டிகளில் எது வெளிச்சத்துக்கு வந்தது என்று சொல்ல வேண்டுமானால் நிச்சயமாக அது ஃபீல்டிங்தான். அதை சரிசெய்தே ஆக வேண்டும்.

கேட்ச்சுகளை சரியாக பிடிப்பது மூலமாக 20 ரன்களை கட்டுப்படுத்தலாம்.

சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் 11 கேட்ச்சுகளை தவறவிட்டுள்ளன. அதில் 3 கேட்ச்சுகள் பஞ்சாப் போட்டியில் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கில் முன்னேற்றம் இருக்கிறது, ஆனால்

நல்ல விஷயம் என்னவென்றால் முன்பை விட நல்ல பேட்டிங் ஆடினார்கள். தொடக்க வீரர்களிடமிருந்து நல்ல பங்களிப்பு வரத் தொடங்கியுள்ளது.

மிடில் ஆர்டரில் ரன் ரேட்டை தக்கவைக்க முடியவில்லை. கடைசி கட்டத்தில் மிகவும் அதிகமான ரன்களை அடிக்க வேண்டியுள்ளது.

ஆட்டத்திலே இல்லாமல் இருப்பதற்கு பதிலாக சற்று ஆட்டத்தில் இருந்தது நல்ல விஷயமாக பார்க்கிறேன். ஃபீல்டிங்கில்தான் அது கோட்டைவிடப்பட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT